‘மாற்றம் மேற்கொள்ள வேண்டாம்’: ஜனாதிபதியின் செயலாளர் அறிவிப்பு

🕔 August 13, 2020

கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது என ஜனாதிபதியின் செயலாளர் அறிவித்துள்ளார்.

சகல அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் எழுத்து மூலம் இது குறித்து ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர அறிவித்துள்ளார்.

அரச கூட்டுதாபனங்கள், சபைகள், அரசியல் அமைப்புச் சபை ஆகியவற்றுக்கு நியமிக்கப்பட்டுள்ள தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களின் பதவிகளில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு ஜனாதிபதியின் இணக்கப்பாடு அவசியம் எனவும் அவர் அந்த கடிதத்தில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்றமையை அடுத்து, குறித்த நிறுவனங்களுக்கான தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபையினர் விசேட குழுவொன்றின் பரிந்துரைக்கு அமையவே நியமிக்கப்பட்டனர்.

அதனால் அதில் மாற்றம் ஏற்படுத்தாது அவர்களை தொடர்ந்தும் கடமையாற்ற அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் அந்த கடிதத்தின் மூலம் அறிவித்துள்ளார்.

Comments