எனது தோல்விக்கு மு.கா. தலைவரும், உதுமாலெப்பையும் காரணமாக இருந்தனர்: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீர் குற்றச்சாட்டு

🕔 August 7, 2020
கோப்புப் படம்

– அஹமட் –

டந்து முடிந்த தேர்தலில் தான் தோற்றுப் போனமைக்கு மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமும், தனது ஊரைச் சேர்ந்த முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பையுமே காரணம் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் வேட்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேவேளை, “நான் தோற்கவில்லை தோற்கடிக்கப்பட்டேன்” எனத் தெரிவித்துள்ள அவர்; தனது கட்சிக்குள்ளிருப்பவர்களே தன்னை தோற்கடித்ததாகவும் கூறியுள்ளார்.

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட நஸீர், அந்தக் கட்சி வேட்பாளர்கள் பெற்ற விருப்பு வாக்குகளின் அடிப்படையில் 26,153 வாக்குகளைப் பெற்று 04ஆவது இடதைப் பெற்றுள்ளார்.

இருந்த போதிலும் ஐக்கிய மக்கள் சக்திக்கு திகாமடுல்ல மாவட்டத்தில் 02 பிரதிநிதித்துவங்களே கிடைத்துள்ளமையினால், நஸீர் தோல்வியடைந்துள்ளார்.

தனது தோல்விக்கு முதல் காரணம், மு.கா. தலைவர்தான் என்று கூறியுள்ள நஸீர்; அம்பாறை மாவட்ட தேர்தல் பிரசார மேடைகளில் மு.கா. தலைவர் பேசிய சில விடயங்களே தனது தோல்விக்கு காரணமாக அமைந்தாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதேவேளை, முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் மு.கா. உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை தன்னைத் தோற்கடிப்பதற்காக பல காரியங்களை மேற்கொண்டதாகவும் நஸீர் கூறியுள்ளார்.

இன்று வெள்ளிக்கிழமை மாலை, நஸீருடைய சொந்த ஊரான அட்டாளைச்சேனையில், அவரின் ஆதரவாளர்கள் முன்னிலையில், நஸீர் உரையாற்றும் போதே இந்த விடயங்களைக் கூறினார்.

‘பேஸ்புக்’ இல் நேரடியாக இந்த உரை ஒளிபரப்பானது.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக களமிறக்கப்பட்ட 10 வேட்பாளர்களில் 06 பேர் முஸ்லிம்கள் என்பதும், அவர்கள் அனைவரும் முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த உரையின் செம்மைப்படுத்தப்பட்ட வடித்தை இங்கு காணலாம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்