ஐந்து வருட இடைவெளியின் பின்னர், நாடாளுமன்றம் செல்கிறார் அதாஉல்லா

🕔 August 7, 2020

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ளார்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த அதாஉல்லா, இம்முறை திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய காங்கிரஸின் குதிரைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

எவ்வாறாயினும் திகாமடுல்ல மாவட்டத்தில் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டமையினை அடுத்தே, அந்த ஆசனம் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரசுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை தேசிய காங்கிரஸ் 39,272 வாக்குகளைப் பெற்றுள்ள நிலையில், அந்தக் கட்சியின் தலைவர் அதாஉல்லா 35,697 விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

07 நாடாளுமன்ற பிரதிநிதித்துவங்களைக் கொண்ட திகாமடுல்ல மாவட்டத்தில் கடந்த முறை – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகி இருந்தார்.

இம்முறை தமிழர் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டுள்ளது.

Comments