திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு 04 ஆசனங்கள்

🕔 August 7, 2020

டைபெற்று முடிந்த நாடளுமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு 04 ஆசனங்கள் கிடைத்துள்ளன.

திகாமடுல்ல மாவட்டத்தில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றுள்ளது.

திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகள் மற்றும் ஆசன விபரங்கள் பின்வருமாறு;

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 126,012 வாக்குகள் – 03 ஆசனங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தி – 102,274 வாக்குகள் – 02 ஆசனங்கள்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 43,319 வாக்குகள் – 01 ஆசனம்.

தேசிய காங்கிரஸ் – 38,911 வாக்குகள் – 01 ஆசனம்.

ஐக்கிய மக்கள் சக்தி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் தேசிய காங்கிரஸ் கட்சிகளின் ஊடாக முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகி உள்ளனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 03 முஸ்லிம் உறுப்பினர்களே தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்