தேர்தல் பிரசார நடவடிக்கை தொடர்பில் கட்சி செயலாளர்கள் விடுத்த வேண்டுகோள்; தேர்தல் ஆணைக்குழு நிராகரிப்பு

🕔 July 30, 2020

கஸ்ட் மாதம் நோன்மதி தினத்தன்று தேர்தல் பிசார நடவடிக்கைகளில் ஈடுபடுபட அனுமதிக்குமாறு அரசியல் கட்சி செயலாளர்கள் முன்வைத்த கோரிக்கையினை தேர்தல்கள் ஆணைக்குழு நிராகரித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக தங்களது தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியவில்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் அண்மையில் நடந்த கூட்டத்தில் கட்சி செயலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

இதன் காரணமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி நோன்மதி தினத்தன்று வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்பதற்கு அல்லது தமது தேர்தல் பிரச்சார ங்களை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் கட்சி செயலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கொவிட்-19 தொற்று நிலைமையுடன் எதிர்நோக்கிய கட்டுப்பாடுகள் காரணமாக வீடு வீடாகச் சென்று வாக்குகளை இரந்து கேட்டல், துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல் போன்ற நடவடிக்கைகள் 2020.08.03ஆம் திகதி மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க இணக்கம் தெரிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட போதும், நடைமுறை சட்டத் தடங்கல்கள் காரணமாக, அதனை கைவிட முடிவு செய்துள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

ஓகஸ்ட் 02 ம் திகதி நள்ளிரவு தொடக்கம் தேர்தல் விளம்பரம் மற்றும் பிரச்சாரம் செய்கின்றமை முடிவுக்கு வருகின்றது.

Comments