லொக்டவ்ன், ஊரங்கு காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்துள்ளது

🕔 July 26, 2020

மூன்று மாதங்களுக்கும் மேல் நீடித்த ‘லொக்டவ்ன்’ மற்றும் ஊரடங்கு காலப் பகுதியில் சிறுவர் மீதான கொடுமை மற்றும் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது என்று, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் இந்த வருடம் ஜுலை மாதம் நடுப்பகுதி வரை 5242 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் 1642 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்த முறைப்பாடுகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பதிவானவையாகும்.

கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு, நாட்டில் மூன்று மாதங்களுக்கும் மேலாக ‘லொக்டவ்ன்’ மற்றும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்