மாகாண கல்விப் பணிப்பாளர் கடமையை, நிஸாம் பொறுப்பேற்றார்

🕔 July 17, 2020

– அஹமட் –

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக எம்.ரி.எம். நிஸாம், இன்று வெள்ளிக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருகோணமலையில் அமைந்துள்ள மாகாண கல்விப் பணிப்பாளர் காரியாலயத்தில் இன்று காலை அவர் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைவாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவியை நிஸாம் மீண்டும் பெற்றுள்ளார்.

எம்.கே.எம். மன்சூர் இதற்கு முன்னர் மாகாண கல்விப் பணிப்பாளராகப் பதவி வகித்து வந்தார்.

தொடர்பான செய்தி: கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராகிறார் மீண்டும் நிஸாம்: நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அனுமதி கிடைத்தது

Comments