‘சானிடைசர்’ செலவு மட்டும், ஒரு கோடியே 20 லட்சம் ரூபா தாண்டும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு

🕔 July 18, 2020

நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்காளர்கள், சானிடைசரை பயன்படுத்தி இரண்டு முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஒரு வாக்காளர் 15 மில்லி லீட்டர் சானிடைசரை பயன்படுத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார். அந்த வகையில் ஒரு வாக்காளர் பயன்படுத்தும் சானிடைசருக்கு ஒரு ரூபாய் செலவாகும்.

இதனடிப்படையில் பொதுத் தேர்தலில் பயன்படுத்தும் சானிடைசருக்காக தேர்தல் ஆணைக்குழு ஒரு கோடியே 20 லட்சம் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை செலவிட்டுள்ளது எனவும் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Comments