ஊரடங்குச் சட்டம் இன்று முதல் நீக்கப்படுகிறது

🕔 June 28, 2020

கொரோனா வைரஸ் பரவுதலைத் தடுக்கும் வகையில் அரசாங்கம் நடைமுறைப்படுத்தி வந்த ஊரடங்குச் சட்டம் இன்றிலிருந்து முழுவதுமாக நீக்கப்படுகிறது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

நள்ளிரவு 12 மணிமுதல் அதிகாலை 4.00 மணி வரையிலான ஊரடங்குச் சட்டம் இறுதியாக அமுலில் இருந்து வந்தது.

கொரோ வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

ஆயினும், இன்று தொடக்கம் அந்த ஊரடங்குச் சட்டம் முழுவதுமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments