தேர்தலுக்கு மறுநாள்தான் வாக்குகள் எண்ணப்படும்: மஹிந்த தேசப்பிரிய

🕔 June 21, 2020

நாடாளுமன்றத் தேர்தர் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 05ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் மறுநாள் 06ஆம் திகதியே நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

இன்று காலை கண்டி மாவட்ட செயலகத்துக்குச் சென்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், பொதுத்தேர்தலுக்காக முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதன் பின்னரே ஊடகங்களுக்கு அவர் கருத்துத் தெரிவித்தார்.

வழமையாக தேர்தல் நடைபெறும் தினம் இரவே, வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பமாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments