வேறு கட்சிகளின் ஊடாக தேர்தலில் போட்டியிடும், ஐ.தே.கட்சி உறுப்பினர்களின் அங்கத்துவம் ரத்தாகும்: செயலாளர் அகில

🕔 May 27, 2020

னைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பை மீறி ஏனைய கட்சிகளின் சார்பில் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளவர்களின் கட்சி உறுப்புரிமைகள் ரத்துச் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகளின் வேட்புமனுக்களில் கைச்சாத்திட்ட எவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவின் எழுத்துமூல அனுமதியை பெற்றிருக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்