நாளை நோன்புப் பெருநாள்; வீட்டிலிருந்து கொண்டாடுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள்

🕔 May 23, 2020

நாட்டின் பல பகுதிகளிலும் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளதால் நாளை நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவுள்ளது.

இதனை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை இன்று இரவு 8.00 மணி முதல் நாளையும், நாளை மறுதினம் திங்கட்கிழமையும் நாடு தழுவிய ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனவே, நாளைய பெருநாள் தினத்தை தத்தம் வீடுகளில் இருந்தவாறு எளிமையான முறையில் கொண்டாடுமாறு, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்