அட்டாளைச்சேனை ஆயுர்வேத வைத்தியசாலைக்கு டொக்டர் பஸ்மினா மருந்துப் பொதிகள் அன்பளிப்பு

🕔 May 21, 2020

ட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு, அங்கு கடமையாற்றும் டொக்டர் ஐ. பஸ்மினா அறூஸ் ஒரு தொகுதி உடல் தேற்றி மருந்துப் பொதிகளை தனது சொந்த நிதியில் பெற்று வழங்கினார்.

கொவிட்-19 வைரசினை கட்டுப்படுத்தும் பொருட்டு ஆயுர்வேத துறையினால் தயாரிக்கப்பட்ட உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருந்தினையே இவ்வாறு அவர் வழங்கி வைத்தார்.

அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டொக்டர் எம்.பீ.எம். றஜீஸிடம் இந்த மருந்துப் பொதிகள் கையளிக்கப்பட்ட நிகழ்வில், டொக்டர் எஸ். முகம்மட் றிசாட், டொக்டர் எம்.எஸ். சிஹானா ஆகியோருடன் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Comments