சாய்ந்தமருது தோணா பாலம் உடைந்ததால், மாநகர சபை உழவு இயந்திரப் பெட்டி குடை சாய்ந்து விபத்து

🕔 May 20, 2020

– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன் –

சாய்ந்தமருது-10 தோணாவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தற்காலிக்க பாலத்தினூடாக கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் உழவு இயந்திரம் பயனித்தவேளை பாலம் இடிந்து விழுந்ததன் காரணமாக குறித்த உழவு இயந்திர இழுவை பெட்டி குடைசாய்ந்தது.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

வழமையைப்போன்று கல்முனை மாநகரசபையின் திண்மக் கழிவகற்றல் உழவு இயந்திரம் குறித்த பாலாத்தின் ஊடாகப் பயணித்த போதே, இந்த சம்வம் நிகழ்ந்தது.

இதன்போது மாநகரசபை ஊழியர் தோணாவில் விழுந்தபோதும், தெய்வாதினமாக ஊயிர் தப்பினார்.

சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு விரைந்த கல்முனை மாநகரசபை அதிகாரிகள் உடனடியாக வாகனத்தை கரை சேர்த்தனர்.

2004 ஆம் ஆண்டு சுனாமி அனர்த்தத்தின் பின்னர் பல்வேறு தன்னார்வ நிறுவனங்கள் தங்களிடம் இருந்த பணத்தை சரியான திட்டமிடல் இல்லாமல் இவ்வாறான வேலைத்திட்டங்களை செய்ததன் பயனே இதுவாகும்.

சாய்ந்தமருது தோணாவின் இரு கரையிலும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமையின் காரணமாக, கடந்த காலங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது தோணாவை நிர்வாகிப்பது யார் என்பது புதிராகவே உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்