கலாநிதி சுக்ரி காலமானார்

🕔 May 19, 2020

லாநிதி எம்.ஏ.எம். சுக்ரி இன்று செவ்வாய்கிழமை தனது 80ஆவது வயதில் காலமானார்.

பிரித்தானியாவின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் சூபித்துவத்தில் தனது கலாநிதி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட இவர், ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

குறிப்பிடத்தக்க அறிஞர்களில் ஒருவரான இவர், முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் காத்திரமான பங்களிப்பைச் செய்துள்ளார்.

தென் மாகாணத்தில், மாத்தறையைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, ஆரம்ப காலத்தில் கவிதை, சிறுகதை என்பவற்றில் ஈடுபாடு காட்டியுள்ளார். பிற்காலத்தில் சமய இலக்கியங்களைத் தந்துள்ளார்.

கலாநிதி சுக்ரி ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சிலவற்றின் விவரம் வருமாறு;

  • காலத்தின் அறைகூவலும் முஸ்லிம்கள் பணியும் (1969)
  • தக்வாவும் நவயுகத்தின் சவாலும் (1982)
  • நளீம் ஹாஜியார் வாழ்வும், பணியும் (1993)
  • ஹதீஸ் வரலாறும் முக்கியத்துவமும் (1993)
  • பேரறிஞர் இமாம் கஸ்ஸாலி (1993)
  • இஸ்லாமியக் கல்வி (ஆங்கில நூல்) (1979)
  • இலங்கை முஸ்லிம்கள் (ஆங்கில நூல்) (1986)
  • அல் குர்ஆன் (1981)
  • ஹதீஸும் சுன்னாவும் (1983)
  • இஸ்லாமிய மனித உரிமைகளும் (1996)
  • இஸ்லாமிய பண்பாட்டு மத்திய நிலையங்கள்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்