கத்தியோடு வீடொன்றுக்குள் புகுந்தவர்கள் அட்டகாசம்; நெசவுப் பொருட்களை எடுத்துச் சென்றதாக புகார்

🕔 May 14, 2020

பாண்டிருப்பு பகுதியிலுள்ள வீடொன்றினுள், நேற்று புதன்கிழமை இரவு அத்துமீறி புகுந்த சில நபர்கள் அங்கிருந்த கைத்தறி, நெசவு உற்பத்திப் பொருட்களை வெட்டி சேதப்படுத்திவிட்டு நெசவு உற்பத்திக்காக பொருத்தப்பட்டிருந்த 04 லட்சம் ரூபா பெறுமதியான ‘பா’ களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

“கத்தியோடு வீட்டுக்குள் புகுந்த சந்தேக நபர்கள் வீட்டு முற்றத்தில் நெசவு உற்பத்திக்காக போடப்பட்டிருந்த கைத்தறி உபகரணங்களை தாறுமாறாக வெட்டி சேதப்படுத்தி விட்டு நெசவு உற்பத்திக்காக பொருத்தப்பட்டிருந்த உபகரணங்களையும் எடுத்துச் சென்றனர். இந்த நாசகாரச் செயலை ஏன் செய்கின்றீர்கள் என்று சிலர் கூக்குரல் இட்டபோது கத்தியை காட்டி அச்சுறுத்தியது மட்டுமல்லாமல் சிலரை தாக்கினார்கள்” என வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த கைத்தறி நெசவு உற்பத்தி இயந்திரங்கள் அயல் கிராமமான மருதமுனையைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானதாகும் எனவும் பாதிக்கப்பட்டவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்