நாடாளுமன்றத் தேர்தலுக்கு எதிரான மனுக்களை, 18, 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்

🕔 May 11, 2020

பொதுத் தேர்தலை எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை செல்லுப்படியற்றது என உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல்கள் மனுக்களையும் எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதென உச்ச நீதிமன்றம் இன்று திங்கட்கிழமைதீர்மானித்துள்ளது.

மேற்படி நாட்களில் இவ்வாறு தாக்கல் செய்யப்பட்ட 04 மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சம்பந்தமாக தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயிக்கும் திகதியை நீதிமன்றத்தின் ஊடாக எவருக்கும் சவாலுக்கு உட்படுத்த முடியாது என சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மேலும் பொதுத்தேர்தல் சம்பந்தமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில், தேர்தல் ஆணைக்குழுவின் சார்பில் தன்னால் ஆஜராக முடியாது எனவும் அவர் உச்ச நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்