குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட, கோட்டாபாய முயற்சிக்கிறார்: மனோ குற்றச்சாட்டு

🕔 March 30, 2020

குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முயற்சிக்கிறார் என்று, முன்னாள் அமைச்சரும் தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில், அரசாங்கம் அலட்சியமாகச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அவர் பதிந்துள்ள பேஸ்புக் குறிப்பு ஒன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“மார்ச் 14ம் திகதிக்கு பின், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் பக்கத்து பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுங்கள்” என்று சொல்லுகின்ற அரசாங்கத்தை கண்டு வியப்பாக இருக்கிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவரின் பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

“பெப்ரவரி மாதத்திலேயே, விமான நிலையங்களை மூடி, சர்வதேச வருகை, செல்கைகளை கட்டுப்படுத்தி, மக்கள் நடமாட்டத்தை முறைப்படுத்துங்கள்” என்று, எதிர்கட்சிகளும் சிவில் சமூகமும் சொன்னதை, இந்த ஜனாதிபதி காதில் வாங்கவில்லை.

‘மார்ச் 19 வேட்பு மனு காலம்’ முடியும்வரை விமான நிலையங்களை மூடி, நாட்டில் ஊரடங்கை கொண்டு வந்து மக்கள் நடமாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர தவறிய, கோட்டாபய ராஜபக்ஷ; இப்போது குதிரை ஓடி தப்பிய பின் லாயத்தை மூட முயல்கிறார்.

தயார்நிலையில் இல்லாத இந்த அரசாங்கத்தின் செயலால், அப்பாவி மக்கள் படும் துயரம் அநேகம். ஒன்று, கொரோனா கொடுமை. இன்னொன்று வாழ்வாதார கொடுமை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்