கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபரும் உயிரிழந்தார்

🕔 March 30, 2020

கொரோனா தொற்றுக்குள்ளான இன்னுமொருவர் இன்று திங்கட்கிழமை மாலை மரணமடைந்துள்ளார்.

கொச்சிகடை பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய ஆண் ஒருவரே மரணமடைந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, இலங்கையில் இதுவரை கொரோனாவினால் இருவர் மரணமடைந்துள்ளனர்.

நாட்டில் கொரோனாவினால் மொத்தமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 122 ஆகும். இன்றைய தினம் மட்டும் (மாலை 6.00 மணி வரை) கொரோனாவால் பாதிக்கப்பட்ட 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Comments