வீடு வீடாகச் சென்று, மாட்டு மூத்திரம் வழங்கும் அரசியல் பிரமுகர்: கொரோனா கூத்து

இந்தியாவின் புதுக்கோட்டை நகரப் பகுதியில் நடிகர் கமலஹாசனின் அரசியல் கட்சியான மக்கள் நீதி மய்யம் பிரமுகர் மூர்த்தி என்பவர், தெருத் தெருவாகச் சென்று மக்களுக்கு மாட்டு மூத்திரம் வழங்கி வருகிறார்.
இது கிருமிநாசினி எனப் பிரச்சாரம் செய்யும் இந்த நபர், வீட்டில் யாரும் இல்லையென்றால் அந்த வீட்டின் மீது மாட்டுக் மூத்திரத்தை தெளித்துச் செல்கிறார்.
கொரோனா தொற்று கடுமையாக பரவி வரும் நிலையில், அதனைக் கட்டுப்படுத்துவதற்காகவே, இவர் மாட்டு மூத்திரம் வழங்கி வருகின்றார்.
தான் வழங்குவது நாட்டு மாட்டு மூத்திரம் என்று கூறும் அந்த நபர், அதனுடன் மஞ்சளைக் கலந்து வீடு முழுக்க தெளிக்குமாறும் ஆலோசனை கூறுகின்றார்.
மாட்டு மூத்திரம் கிருமி நாசினி என்பது மூட நம்பிக்கையாகும்.