கொரோனா: மறைந்திருக்கும் ஆட்களை பொதுமக்களின் உதவியுடன் தேடுவதற்கு அரசாங்கம் முடிவு

🕔 March 17, 2020

கொரோனா ஆபத்து அதிகம் கொண்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்து, தனிமைப்படுத்தப்படாது தம்மை மறைத்திருக்கும் ஆட்களை, பொது மக்களின் விழிப்புணர்வின் ஊடாக, பொது மக்களின் உதவியுடன் தேடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்க்கிருமியின் பரவலை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கத்தினால் இன்று செவ்வாய்கிழமை இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அங்கு மேற்கொள்ளப்பட்ட ஏனைய தீர்மானங்கள் வருமாறு

01. இலங்கைக்கு வரும் அனைத்து விமானங்களையும் மார்ச் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு இடைநிறுத்த வேண்டும்.

02. அத்தியாவசிய சேவைகள், மற்றும் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் பொது மக்களின் அன்றாட வாழ்வைச் சீர்குலைக்காமல் தொடருவதை உறுதிப்படுத்தல்.

03. போலிச் செய்திகளையும் வதந்திகளையும் பரப்பி – பொது மக்களிடத்தில் தேவையற்ற அச்சத்தைத் தூண்டுவோர் மீது உடனடி கடும் நடவடிக்கை எடுத்தல்.

04. சமூக ஒன்றுகூடல்கள், கொண்டாட்டங்கள், பெரிய அளவிலான கூட்டங்கள் போன்றவற்றைக் குறைத்தல்.

05. தற்போது இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ள 300 யாத்ரீகர்களை உடனடியாகத் திரும்ப கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தல்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்