பொதுத் தேர்தல்: எந்தெந்த மாவட்டத்துக்கு எத்தனை உறுப்பினர்கள்: அறிவித்தது ஆணைக்குழு

🕔 March 9, 2020

திர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலிருந்து ஆகக் கூடிய உறுப்பினர்களும், திருகோணமலை மாவட்டத்திலிருந்து ஆகக் குறைந்த உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் 196 உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் மாவட்ட மட்டத்தில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் கொழும்பு மாவட்டத்தில் இருந்து 19 உறுப்பினர்களும் கம்பஹா மாவட்டத்தில் 18, களுத்துறையில் 10, கண்டி 12, மாத்தளை 05, நுவரெலியா 08, காலி 09, மாத்தறை 07, ஹம்பாந்தோட்டை 07, யாழ்ப்பாணம் 07, வன்னி 06 மட்டக்களப்பு 05, திகாமடுல்ல 07, திருகோணமலை 04, குருணாகல் 15, புத்தளம் 08 அநுராதபுரம் 09, பொலன்னறுவை 05, பதுளை 09, மொனராகலை 06, இரத்தினபுரி 11 மற்றும் கேகாலை மாவட்டத்தில் இருந்து 09 உறுப்பினர்கள் என 196 உறுப்பினர்கள் மொத்தமாக மக்களால் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

அத்துடன் கட்சிகளின் வேட்புமனுவில் அந்ததந்த மாவட்டங்களில் இருந்து தெரிவுசெய்யப்படும் மொத்த உறுப்பினர்களின் தொகையைவிட 3 உறுப்பினர்களின் பெயர்கள் மேலதிகமாக இடப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு 19 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்