கொரோனா அச்சம்: மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் தடுத்து வைக்க, 181 பேர் அனுப்பப்படவுள்ளனர்

🕔 March 10, 2020

ட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தில் தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானர்வர்கள் எனச் சந்தேகிக்கப்படுவோர் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

இவர்கள் இன்று திங்கட்கிழமை காலை  நாட்டை வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு வருகை தந்தவர்களில் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 3.33 மணியளவில் குறித்த பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததனர்.

மேற்படி நபர்கள் பெட்டிக்கலோ கெம்பஸில் தங்கவைக்கப்பட்டு 14 நாட்களுக்கு கண்காணிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்கள் தற்போது தயார்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வருகைதரும் பயணிகள்  பெட்டிக்கலோ கெம்பஸ் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றுக்கு அனுப்பப்படவுள்ளனர்.

இந்த நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவுக்கு சொந்தமான மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்தை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களைத் தடுத்து வைப்பதற்கான நிலையமாக, சுகாதார அமைச்சு அண்மையில் கையகப்படுத்தியிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்