ஜம்மிய்யதுல் உலமா சபை மீதான குற்றச்சாட்டு; விஜேதாஸவின் இழிசெயல்: நகர சபை உறுப்பினர் மஹ்தி கண்டனம்

🕔 March 1, 2020

– ஹஸ்பர் ஏ ஹலீம் –

ஸ்டர் தாக்குதல் குறித்து  விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்  வாக்குமூலம் அளித்த  விஜேதாஸ ராஜபக்ஷ, இலங்கை முஸ்லிம்கள் குறித்தும், ஜம்மிய்யதுல் உலமா குறித்தும்  தெரிவித்த குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் பொய்யானதும் கண்டனத்துக்குரியதுமாகும் என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம். மஹ்தி தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலமளித்த விஜேதாஸ ராஜபக்ஷ; ஹலால் சான்றிதழ் வழங்குதல்,  பெண்கள் முகத்தை மூடுதல், ஷரிய்யா சட்டத்தை கற்பித்தல், அரபு மொழியை கற்பித்தல் போன்ற செயற்பாடுகளின்  மூலம் இலங்கையை இஸ்லாமிய ராஜ்ஜியமாக மாற்றுவதற்கு  ஜம்மியத்துல் உலமா  முயற்சி எடுப்பதாக குற்றம் சாட்டினார்.

இப்பணிகள் நான்கும் மக்களை நேர்வழிப் படுத்தும்  முஸ்லிம்களின் ஆன்மிகப் பணியே தவிர நாட்டுக்கு எதிரான எந்த சூழ்ச்சிகளும் கொண்டதல்ல.

இன் நாட்டின் பாதுகாப்புக்கும், சட்ட திட்டங்களுக்கும்  மதிப்பளித்து வரும் முஸ்லிம்களையும், நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப் பட்ட  ஜம்மியத்துல் உலமாவையும் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பொய்  குற்றச்சாட்டுகளை சுமத்தி, கொச்சைப் படுத்துவதோடு  பெரும்பான்மை சமூகத்திடம் இருந்து முஸ்லிம்களை மேலும்  அந்நியப் படுத்தும் இவ்வாறான இழி செயலை இனிமேலும்  செய்ய  வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

தேர்தல்கள்  நெருங்கும் இத்  தருணத்தில் உங்களது  அரசியல் வங்குரோத்து நிலைமயை பாதுகாப்பதற்காக பொய்களை கூறி  அப்பாவி சமூகத்தை பலிகொடுக்க முயட்சிக்க வேண்டாம் எனவும்  கூறி, வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் நகர சபை உறுப்பினர் மஹ்தி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்