கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் முதல் மரணம் பதிவு

🕔 March 1, 2020

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் அமெரிக்காவில் முதல் மரணம் நிகழ்ந்துள்ளது.

கொரோனாவினால் பாதிக்கப்பட்ட வாஷிங்டனைச் சேர்ந்த 50 வயது நிரம்பிய பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உலகின் 50க்கும் அதிமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் நேற்றுவரை 2 ஆயித்து 835 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 ஆயிரத்து 251 பேருக்கு வைரஸ் பரவியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Comments