நாடு முழுவதும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் வருடத்தின் முதல் 15 நாட்களில் பதிவு: மட்டக்களப்பு முன்னிலையில்

🕔 February 9, 2020

ந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மட்டும் 142 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் இலங்கையில் பதிவாகியுள்ளன.

அதேவேளை, 42 மோசமான பாலியல் சம்பவங்களும் 54 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் குறித்த 15 நாட்களிலும் இடம்பெற்றுள்ளன.

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ இந்த தகவலை நாடாளுமன்றில் சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

மேற்படி குற்ற சம்பவங்கள் தொடர்பில் பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவங்களில் 78 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்தும், மோசமான பாலியல் துஷ்பிரயோகம் பற்றிய 21 சம்பவங்கள் தொடர்பிலும் சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய 34 சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் முடிவுற்றுள்ளன.

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அங்கு 44 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், 08 கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும், 17 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களும் அங்கு பதிவாகியுள்ளன.

Comments