பட்டதாரிகள் தொழிலுக்காக விண்ணப்பிக்கும் வயதெல்லை அதிகரிப்பு

🕔 February 9, 2020

ட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான விண்ணப்ப வயதெல்லை 45 வயதாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்த வயதெல்லை 35 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

50 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மாதம் தொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போதுள்ள புள்ளிவிபர ஆவணத்திற்கு அமைவாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் தொழில் இன்றி இருப்பதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்திருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments