அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் வித்தியாரம்ப விழா: அதிபர் அன்சார் தலைமை

🕔 January 16, 2020

ட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் முதலாம் வகுப்புக்கு சேர்ந்து கொண்ட புதிய மாணவர்களை வாழ்த்தி வரவேற்கும் வித்தியாரம்ப விழா, அதிபர் எம்.ஏ. அன்சார் தலைமையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் ஆரம்பக் கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹிர், பாடசாலைக்கான மேம்பாட்டுத் திட்ட இணைப்பாளர் எம்.ஐ. அன்சார், மக்கள் வங்கியின் சந்தைப் படுத்தல் முகாமையாளர் எம்.ஐ.எம். நபீல் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

புதிய மாணவர்களுக்கு இன்றைய தினம் ஏடு துவக்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

அறபா வித்தியாலயத்தில் இம்முறை முதலாம் வகுப்புக்கு 40 மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

Comments