கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தீர்மானம் எட்டப்படாமல், ஐ.தே.க. நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கலைந்தது

🕔 January 16, 2020

க்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியைத் தீர்மானிப்பதற்காக, கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பொழுதிலும், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை என்று கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று அந்தக் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்நிலையிலேயே தலைவர் பதவி தொடர்பில் எவ்வித முடிவுகளும் எட்டப்படாமல் கூட்டம் கலைந்துள்ளது.

17ஆம் திகதிக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படவில்லை என்றால், மாற்று நடவடிக்கைக்கு தாம் செல்ல நேரிடும் என்று, சஜித் ஆதரவு அணியினர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், கட்சி யாப்பின் பிரகாரம் தலைமைப் பதவியைத் தீர்மானிக்கும் அதிகாரம், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவுக்குக் கிடையாது என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன நேற்று தெரிவித்திருந்தார்.

Comments