அரசியலமைப்பில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது: அஸ்கிரிய பீடம் தெரிவிப்பு

🕔 January 5, 2020

லங்கை அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களில் 19ஆவது திருத்தமே மிகவும் மோசமானது என்று அஸ்­கி­ரிய பீடத்தின் அநு­நா­யக்க திம்புல் கும்­புரே ஸ்ரீ விம­ல­தர்ம தேரர் தெரிவித்துள்ளார்.

அந்தத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிதைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஜனா­தி­பதி கோட்டாபய ராஜ­ப­க்ஷவின் கொள்கை பிர­க­டன உரை தொடர்பில், அஸ்­கி­ரிய பீடத்தின் நிலைப்­பாட்டை தெரிவிப்படுத்தும் விசேட அறி­விப்­பி­லேயே தேரர் இதனைத் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இலங்­கையில் 19 தட­வை அர­சி­ய­ல­மைப்பில் திருத்தங்கள் மேற்கொள்­ளப்­பட்­டுள்­ளன. அவற்றில் மிகவும் மோசமானது 19 ஆம் திருத்­த­மாகும். ஜனா­தி­ப­தி­யி­னு­டைய அதிகாரங்கள் குறைக்கப்­பட்­டுள்­ளன. பிர­த­ம­ரிடம் சில அதி­கா­ரங்கள் , சபாநாயகரிடம் சில அதி­கா­ரங்கள் என ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் சிதைக்­கப்­பட்­டுள்­ளன.

இவ்­வாறு ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் சிதைக்­கப்­பட்­டுள்­ள­மையால் நாட்டில் ஏதே­னு­மொரு அவ­சர நிலைமை ஏற்­படும் போது உடனடியாக தீர்­வொன்றை எடுக்க முடி­யாத நிலைமை ஜனாதிபதிக்கு ஏற்­ப­டு­கி­றது. இது மிகவும் மோச­மான நிலைமையாகும். இதில் மாற்றம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும். இவ்வாறான மாற்றம் நிச்­சயம் ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பதை தனது கொள்கை பிர­க­டன உரையின் மூலம் ஜனா­தி­பதி நினைவுபடுத்­தி­யி­ருப்­பது வர­வேற்கக் கூடிய விட­ய­மாகும்.

ஜனா­தி­பதி கோட்டாப ராஜ­பக்ஷ மாத்­தி­ர­மின்றி எதிர்க்­கட்சித் தலைவர் சஜித் பிரே­ம­தா­ஸவும் நாட்டின் முன்­னேற்­றத்­துக்கு எடுக்­கப்­பட வேண்­டிய நட­வ­டிக்­கைகள் பற்­றியே தெரி­வித்தார்.

எனவே நாட்டின் நன்மைக்காக ஏதேனுமொரு நடவடிக்கையை ஜனா­தி­பதி முன்னெடுக்கும் போது, அதற்கான ஒத்துழைப்பினை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் வழங்குவாராயின்,  இந்நாட்டை வெகு விரைவில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றுவதற்கு வாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன” என்றார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்