அட்டாளைச்சேனையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு ஐவர் தெரிவு: 37 வருடங்களின் பின், மற்றொரு சாதனை

🕔 December 28, 2019

– முன்ஸிப் அஹமட் –

நேற்று வெளியான க.பொ.த. உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 05 மாணவர்கள் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

அட்டாளைச்சேனையிலிருந்து ஒரே தடவையில் அதிகமானோர் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளமை இதுவே முதற் தடவையாகும்.

இதற்கு முன்னர் 1982ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையிலிருந்து ஒரே தடவையில் 04 பேர் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு தெரிவாகி இருந்தனர்.

டொக்டர் எம்.எஸ். மனாப் (கண், காது, தொண்டை நிபுணர்), டொக்டர் எம்.எல்.ஏ. பாயிஸ் (குழந்தை நல நிபுணர்), டொக்டர் எஸ்.ஏ. உவைஸ் (தோல் மருத்துவ நிபுணர்) மற்றும் டொக்டர் எம். ஹம்மாம் ஆகியோரே 1982ஆம் ஆண்டு அட்டாளைச்சேனையிலிருந்து மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியிருந்தனர்.

அந்த வகையில் 37 வருடங்களின் பின்னர் அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சிகரமானதாகும்.

இம்முறை மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளவர்களில் பெண் மாணவர்களும் அடங்குவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்