க.பொ.த. உயர்தர பரீட்சை: நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பெறுபேறு வெளியானது

🕔 December 27, 2019

.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தனது பரீட்சை முடிவினை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அதன்படி அரசியல் விஞ்ஞானம் – S, தொடர்பாடல் மற்றும் ஊடகம் – S, கிறிஸ்தவம் – F, ஆங்கிலம் (பொது) – A, பொது அறிவு – 50 என, அவரின் பெறுபேறு அமைந்துள்ளது.

பழைய பாடத்திட்டத்தின் கீழ் ரஞ்சன் ராமநாயக்க இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தார்.

ரஞ்சன் ராமநாயக்க தனது 56ஆவது வயதில் இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments