ஏமாற்றமளித்தார் ஒட்டகத்தார்: தீர்மானமின்றிப் போன, ஜனாதிபதி வேட்பாளர்

🕔 November 17, 2019

– அஹமட் –

னாதிபதியைத் தீர்மானிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்’ என்கிற அடைமொழியுடன், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட கிழக்கு மாகாண முன்னாளர் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா,  38,814 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுயேட்சையாக ஒட்டகச் சின்னத்தில் ஹிஸ்புல்லா போட்டியிட்டார்.

பிரதான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா களமிறக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்ட போதிலும், எந்தவொரு தடவையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு இவர் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குச் சீட்டில் முதல் தெரிவை தனக்கு வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்த ஹிஸ்புல்லா, தெரிவு வாக்கினை வாக்காளர்களின் விருப்பப்படி வழங்குமாறு கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், இந்தத் தேர்தலில் பெரும் எடுப்பில் பிரசாரம் மற்றும் விளம்பரங்களைச் செய்து வந்த ஹிஸ்புல்லா, வெறும் 38,814 வாக்குகளையே பெற்றிருப்பது பலருக்கும் ஏமாற்றத்தையளித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்