ஊழல், வீண் விரயத்தை இல்லாமல் செய்வோம்; ஊழல் செய்யாத தலைவரால்தான் இந்த வாக்குறுதியை வழங்க முடியும்: சுனில் ஹந்துன்நெத்தி

🕔 November 3, 2019

– எம்.என்.எம். அப்ராஸ் –

ந்த நாட்டில் ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாமல் செய்வோம் என்று, ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் கோப் குழுவின் தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி உறுதியளித்தார்.

“இந்த வாக்குறுதியை வழங்குவதற்கு ஊழல் செய்யாத தலைவர் ஒருவரால் மாத்திரமே முடியும்” என்றும் அவர் கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளருமான அனுர குமார திசாநாயக்கவை ஆதரித்தும், தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பாக விளக்கமளித்தும் இடம்பெற்ற கலந்துரையாடலொன்று கல்முனை பரடைஸ் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

“இந்த நாட்டில் ஊழல் மற்றும் வீண்விரயத்தை இல்லாமல் செய்வோம் என நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம். இந்த வாக்குறுதியை வழங்குவதற்கு, ஊழல் அற்ற தலைவரால் மாத்திரமே முடியும்.

மேலும் நாட்டில் பாதுகாப்பையும், மக்கள் மத்தியில் ஒற்றுமையையும் ஏற்படுத்துவோம்.

தேர்தல் இல்லாத காலங்களில் உங்கள் மனதிலுள்ள உங்களுக்கு விருப்பமான கட்சி எது என்று நாங்கள் மக்களிடம் கேட்க்கிறோம்?

விவசாயிகளின், மீனவர்களின் பிரச்சினைகள் பற்றி பேசுகின்ற கட்சி என்றால் மக்கள் விடுதலை முன்னணிதான்.

இந்த நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த வேண்டுமானால் அனுர குமார திஸ்ஸா நாயக்கவை ஆதரியுங்கள்” என்றார்.

Comments