ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு பிராணிகளின் உருவத்தில் சின்னங்கள்: தேரருக்கு ‘நாய்’

🕔 October 12, 2019

– முன்ஸிப் –

ம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சின்னங்களில் கணிசமானவை பிராணிகளின் உருவத்தில் அமைந்துள்ளமை சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அபயரெக்கே புஞ்ஞானந்த தேருக்கு ‘நாய்’ சின்னமாக வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கெட்டகொட ஜயந்த என்பவருக்கு ‘காண்டா மிருகம்’ சின்னமும், ஏ.பி.எஸ். லியனகே என்பவருக்கு ‘கங்காரு’வும் கிடைத்துள்ளன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கத்துக்கு ‘மீன்’ சின்னமாகக் கிடைத்துள்ளது.

எச். அமரசிங்கவுக்கு ‘அணில்’ சின்னமும், வர்ணகுலசூரிய மில்ரோய் சர்ஜீயஸ் பெனாண்டோ என்பவருக்கு ‘மான்’ சின்னமும் கிடைத்துள்ளன.

‘ஆந்தை’ சின்னம் ரஜீவ விஜேசிங்கவுக்கு கிடைத்துள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவுக்கு ‘ஒட்டகம்’ சின்னமாகக் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments