தகவல் அறியும் உரிமைச் சட்டம்: பொய்யான தகவல் வழங்கும் உத்தியோகத்தருக்கு கிடைக்கும் தண்டனை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
– அஹமட் –
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விவரங்களைக் கோருவோருக்கு பொய்யான அல்லது உள்நோக்கத்துடன் அரைகுறையான தகவல்களை வழங்கும் உத்தியோகத்தர்களுக்கு இரண்டாண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்குவதற்கு சட்டத்தில் இடமுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சடத்தின் ஊடாக, விவரங்கள் கோரப்படும் போது, அரச மற்றும் அதிகார சபைகளில் பணியாற்றுவோர்…
- வேண்டுமென்றே பிழையான, முழுமையற்ற அல்லது துல்லியமற்ற தகவல்களை உள்நோக்கத்துடன் வழங்குதல்
- தகவல்களை அழித்தல், செயலற்றதாக்குதல், மாற்றுதல், முழுமையாக அல்லது பகுதியளவில் மறைத்தல்
உள்ளிட்ட செயல்களை மேற்கொள்ளுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
குறித்த குற்றத்தைப் புரிந்தவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு குற்றவாளியாக நிரூபணமானால் 50 ஆயிரம் ரூபாவுக்கு மேற்படாத தண்டப் பணத்துக்கு அல்லது 02 ஆண்டுகளுக்கு மேற்படாத காலப்பகுதியொன்றுக்கான சிறைத்தண்டனைக்கு அல்லது தண்டப்பணம், சிறைத்தண்டனை ஆகிய இரண்டுக்கும் ஆளாதல் வேண்டும்.
ஊடகவியலாளர் ஒருவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அண்மையில் கோரியிருந்த விவரங்களுக்கு, பொய்யான தகவல்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பான செய்தி: பொய் தகவல் வழங்கிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக கணக்காளர்: மோசடியை மறைக்க எடுத்த முயற்சி அம்பலம்