ஊவா மாகாண சபை, இன்று கலைகிறது

🕔 October 8, 2019

– க. கிஷாந்தன் –

வா மாகாண சபையின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவுக்கு வரவுள்ளது.

கடந்த 05 வருட காலப்பகுதியில் இந்த மாகாணத்தில் 05 ஆளுநர்களும், மாகாண சபையில் 03 முதலமைச்சர்களும் பதவி வகித்துள்ளனர்.

கடந்த மாகாண சபை தேர்தல் பெறுபேறுக்கு அமைவாக 36 உறுப்பினர்கள் இந்த சபையில் அங்கத்துவம் வகித்தனர்.

இவர்களில் 19 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைபை சேர்ந்தவர்கள். ஐக்கிய தேசிய கட்சி சார்பில் 13 உறுப்பினர்கள், மக்கள் விடுதலை முன்னணி சார்பில் 02 உறுப்பினர்கள்.

சஷீந்திர ராஜபக்ச, ஹரின் பெனான்டோ ஆகிய முதலமைச்சர்களுக்கு பின்னர், 06 ஆவது ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக சாமர சம்பத் தஸநாயக்க பதவி வகுத்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்