நால்வரில் ஒருவர்தான் எமது ஜனாதிபதி வேட்பாளர்: பெயர்களை சொல்லி, அமைச்சர் ரவி தெரிவிப்பு

🕔 September 9, 2019

ணில், கரு, சஜித், பொன்சேகா ஆகிய நால்வரில் ஒருவரையே ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிக்கும் என்று அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்ள வேட்பாளர் நெருக்கடி விவகாரம் குறித்தும், அமைச்சர் சஜித் மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்த்தை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் கூறியள்ளார்.

“ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அந்தஸ்தை அச்சுறுத்தியோ எச்சரிக்கை விடுத்தோ தட்டிப்பறிக்க முடியாது. அதேபோல் கட்சிக்குள் ஒருபோதும் பிளவும் ஏற்படுத்த முடியாது. சிலர் கட்சியை பிளவுபடுத்த முயற்சிகளை எடுக்கலாம்.

ஆனால் அதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். கட்சிக்குள் எப்போதுமே ஜனநாயக ரீதியிலான நகர்வுகளுக்கு முதலிடம் உள்ளது. எவரும் எந்தக் கருத்துக்களையும் கூற முடியும். ஆனால் அது கட்சியையோ ஆதரவாளர்களையோ பாதிக்கும் வகையில் அமைந்துவிடக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments