eteacher: இலத்திரனியல் கற்கை இணையத்தளம்: மாணவர், ஆசிரியர்களுக்கு பொன்னான வாய்ப்பு

🕔 September 6, 2019

லங்கை தமிழ் பேசும் மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான, புதுமை படைக்கும் இலத்திரனியல் கற்கை இணையத்தளம் இதுவாகும்.

eteacher இணையத்தளமானது மாணவர்களினை இணையத்தினூடாக இணைத்து கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஒரு இலத்திரனியல் இணையத்தளமாகும்.

இவ் இணையத்தளத்தினூடாக ஆரம்பக் கல்வி, இடைநிலை மற்றும் உயர்தர மாணவர்களுக்காகவும், அரசாங்க போட்டிப் பரீட்சாத்திகள் மற்றும் ஏனைய தொழில் சார் கற்கையாளர்களுக்குமாக விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்கால மாணவர்களின் சாவல்களுக்கு ஏற்ப இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனோடு இணைந்து இணைய வழி கற்கைநெறி, வினாவங்கி, நேரலை வகுப்பறை, மின் நூலகம் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ள முடியும்.

இவ் இணையத்தளத்தினூடாக இணைந்து கொண்டு, உலகத்தில் எந்தவொரு மூலையிலிருந்தும், மாணவர்கள் கற்கும் அதேவேளை, ஓர் ஆசிரியராக கற்பித்தலினை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் ஓர் ஆசிரியராக வீட்டில் இருந்தவாறே eteacherlk.com இணையத்தளத்தினூடாக பாடநெறிகளை வழங்கி, மேலதிக வருமானத்தினைப் பெற்றுக்கொள்வதற்கும் இது சிறந்த வழியாகும்.

இணைந்துகொள்ள : www.eteacherlk.com

Comments

புதிது பேஸ்புக் பக்கம்