அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது: பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

🕔 August 23, 2019

நாட்டில் அமுல் படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சாந்த கோட்டாகொட தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, நாட்டில் 22ஆம் திகதி நள்ளிரவு அவசரகாலச் சட்டத்தை அமுலாக்குவது தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டது.

ஏப்ரல் 23ஆம் திகதியிலிருந்து ஒவ்வொரு மாதமும் நீடிக்கப்பட்டு வந்த அவசர காலச் சட்டம்; இன்று 23ஆம் திதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையிலேயே, அவசர காலச் சட்டம் தொடர்ந்தும்ட நீடிக்கப்பட மாட்டாது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கூறியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்