டொக்டர் ஷாபி விவகாரம்: குருணாகல் டிஐஜி, எஸ்.எஸ்.பி ஆகியோருக்கு மொனராகல, கிளிநொச்சிக்கு உடனடி இடமாற்றம்

🕔 August 1, 2019

குருணாகல் பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் (டிஐஜி) கித்சிறி ஜயலத் மற்றும் குருணாகல் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (எஸ்.எஸ்.பி) மஹிந்த திஸாநாயக்க ஆகியோருக்கு உடனடியாக அமுலுக்கும் வரும் வகையிலான இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜயலத் மொனராகல பிராந்தியத்துக்கும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்க கிளிநொச்சி மாவட்டத்துக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு இந்த இடமாற்றத்துக்கான அங்கிகாரத்தினை இன்று வியாழக்கிழமை வழங்கியிருந்தது.

டொக்டர் ஷாபி தொடர்பான விசாரணைகளை எவ்வித இடைஞ்சல்களும் இன்றி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் நடத்துவதற்கு ஏதுவாகவே, இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments