காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராகுல் ராஜிநாமா: நாடாளுமன்ற தேர்தல் தோல்விக்கும் பொறுப்பேற்பு

🕔 July 3, 2019

கில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, அந்தப் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 17வது நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி இந்தியா முழுவதும் 52 இடங்களில் மட்டுமே வென்றது.

ஒட்டுமொத்த இடங்களில் 10%ஐ விடவும் கூடுதல் இடங்களில் வெல்லவில்லை என்பதால், காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றில் பிரதான எதிர்க் கட்சி அந்தஸ்தும் கிடைக்கவில்லை.

2014இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் 44 இடங்களில் மட்டுமே வென்றது என்பதால், அப்போதும் எதிர்க் கட்சித் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு தர முடியாது என்று நரேந்திர மோதி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் தெரிவித்திருந்தது.

இரண்டு இடங்களில் போட்டியிட்ட ராகுல், அவர் தொடர்ந்து மூன்று முறை வென்ற உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் தோல்வியைச் சந்தித்தார்.

இரண்டாவது தொகுதியாக அவர் களம் இறங்கிய கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் ராகுல் வென்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்