றிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: நிலைப்பாட்டை வெளியிட்டது ரெலோ

🕔 May 26, 2019

– பாறுக் ஷிஹான் –

மைச்சர் பதவியில் இருந்தவாறே தன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணையினை அமைச்சர் றிசாட் பதியுதீன் எதிர்கொண்டால், அந்த பிரேரணைக்கு ஆதரவாக தாம் வாக்களிக்க நேரிடும் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை, ரெலோ அமைப்பின் செயலாளர் என். சிறிகாந்தா இந்த கருத்தைக் கூறினார்.

அவர் இதன்போது கூறுகையில்;

“அமைச்சர் றிசாத் பதியுதீன் உடனடியாக பதவி விலகி நீதியான விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். றிசாத் பதியுதீன் விலக மறுத்தால், அவரை அரசாங்கம் பதவி விலக்க வேண்டும்.

அதையும் மீறி அவர் விடாப்பிடியாக பதவியில் இருந்தபடி நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்கொண்டால், அந்த பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என, ரெலோ இன்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது” என்றார்.

வவுனியாவிலுள்ள ரெலோ தலைமையகத்தில், கட்சியின் தலைமைக்குழு கூட்டம் இன்று நடந்த போது, மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் இதன்போது அவர் கூறினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்