டொக்டர் ஷாஃபியின் கைது: அரசியல் பழிவாங்கலா?
குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மருத்துவர் குறித்து விசாரிக்க விசேட குழுவொன்றை நியமிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. குறித்த மருத்துவர் சர்ச்சைக்குரிய விதத்தில் குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் உதவியுடன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த விசேட விசாரணைக் குழு அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சேகு சியாப்தீன் மொஹமட் ஷாபி என்ற மருத்துவர் தற்போது கணக்கில் காட்ட முடியாத வகையில் சொத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும், குறித்த மருத்துவர் சர்ச்சைக்குரிய விதத்தில் 4000 பெண்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்ததுடன், ராஜபக்ஷ தரப்பினரும் மக்களிடையே இந்த கருத்தை பரப்பியிருந்தனர்.
குடும்பக் கட்டுப்பாடு குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்திராத நிலையில், குருணாகல் வைத்தியசாலையின் பணிப்பாளரான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நெருங்கிய செயற்பாட்டாளர், மருத்துவர் சரத்வீர பண்டாரவினால் ஊடகவியலாளர் சந்திப்பொன்று நடத்தப்பட்டிருந்தது.
திவயின பத்திரிகையில் வெளியான சர்ச்சைக்குரிய செய்தி குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பப்பட்ட மறு தினத்தில் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.
இதற்கு ராஜபக்ஷவிற்கு நெருக்கமான ஊடக நிறுவனங்களினால் விரிவான பிரசாரம் வழங்கப்பட்டிருந்தது. ஊடக நிறுவனங்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் மற்றும் இனவாத சந்தையைப் பயன்படுத்தி தமது செய்திகளை பார்க்க வைக்க இவ்வாறான செய்திகளுக்கு முக்கியத்துவம் வழஙகப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அவர் ஒரு முஸ்லிம் என்பதனாலும், அவர் அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு ஆதரவானவர் என்பதாலும் இவ்வாறு சில இனவாத ஊடகங்கள் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம் ஒரு முறைப்பாடு கூட இல்லாத நிலையில், குறித்த மருத்துவர் மீது குடும்பக்கட்டுப்பாடு குறித்து குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், குறித்த செய்தி வெளியானதன் பின்னர் இரண்டு பெண்கள் பொலிஸ் நிலையில் முறையிட்டுள்ளதாக தெரியவருகிறது.
அந்தச் சம்பவத்துடன் குருணாகல் பொலிஸாரும் உடந்தையாக செயற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குருணாகல் பிராந்தியத்துக்குப் பொறுப்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத் கடமையாற்றுகிறார். இவரது மனைவி, குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவராவார். குருணாகல் வைத்தியசாலை பணிப்பாளர் சரத் வீரபண்டாரவின் சகா இவர்.
சம்பவம் தொடர்பாக மருத்துவரைக் கைதுசெய்யுமாறு குருணாகல் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
குறித்த மருத்துவர் குற்றம் செய்திருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகும். எனினும், ராஜபக்ஷவாதிகளின் ஊடக நிறுவனங்களின் பிரசாரங்களுக்கமைய குறித்த மருத்துவர் கைதுசெய்யப்படவோ, அந்த அரசியல்வாதிகளுக்கு தேவையான வகையில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ கூடாது.
குறித்த மருத்துவர் குற்றம் செய்திருந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அத்தியாவசியமாகும். எனினும், ராஜபக்சவாதிகளின் ஊடக நிறுவனங்களின் பிரசாரங்களுக்கமைய குறித்த மருத்துவர் கைதுசெய்யப்படவோ, அந்த அரசியல்வாதிகளுக்கு தேவையான வைகயில் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவோ கூடாது.
நன்றி: LNW