கிளிக் குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை: உலகில் முதல் தடவை

🕔 May 11, 2019

நியூசிலாந்தில் உள்ள விலங்குகள் நல மருத்துவர்கள் பிறந்து 56 நாட்களே ஆன கிளிக்குஞ்சு ஒன்றுக்கு, உலகிலேயே முதல் முறையாக மூளை அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

அழியும் நிலையில் உள்ள உயிரினமாக அறிவிக்கப்பட்டுள்ள, நியூசிலாந்தை பூர்விகமாகக் கொண்ட ‘காகபோ’ வகைக் கிளிகள் தற்போது வெறும் 144 மட்டுமே உள்ளன.

நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள காட்பிஷ் தீவில் இருந்த இந்தக் கிளிக் குஞ்சின் தலையில் வழக்கத்துக்கு மாறான வீக்கம் இருப்பதை கண்ட விலங்குகள் பாதுகாப்புத் துறையின் காகபோ கிளிகள் மீட்புக் குழுவினர், அதன் மண்டை ஓட்டில் துளை இருப்பதைக் கண்டறிந்தனர்.

மனிதர்கள் மற்றும் பிற பாலூட்டிகளுக்கு மூளை அறுவை சிகிச்சை செய்யும் வழிமுறைகளைப் பின்பற்றி, எஸ்பி 1-பி என்று பெயரிடப்பட்ட இந்தக் கிளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அந்த நாட்டின் அரசு விமான நிறுவனம், பயணச் செலவுக்கு கட்டணம் எதுவும் வாங்காமல் மாசே பல்கலைக்கழத்தில் உள்ள வைல்டுபேஸ் மருத்துவமனைக்கு, இந்தக் கிளிக் குஞ்சைக் கொண்டு செல்ல உதவியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்