அவர்களை ஒற்றுமைப்படுத்த முயன்று, நான் மாட்டிக் கொண்டேன்; மஹிந்த, மைத்திரி தொடர்பில் எஸ்.பி. கூறும் கதை

🕔 October 5, 2015
S.B. Disanayaka - 09முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளை ஒற்றுமைப்படுத்த முயன்று,  இறுதியில் – தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டதாக அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகமொன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் கூறியதாவது;

“பொதுத் தேர்தல் நடவடிக்கையில் செயற்படுவதற்கு, மைத்திரிக்கு  இடமளிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் நான் கோரினேன். அந்த விடயம், அது கடல் அலை போன்று என்னையே தாக்கி சிக்கலில் தள்ளிவிட்டது.

எனினும், முன்னாள் ஜனாதிபதியையும் தற்போதைய ஜனாதிபதியையும் இணைக்கும் முயற்சியில் நான்தான் முதலில் ஈடுபட்டேன். இறுதியில் இது விடயத்தில் நான் சிக்கிக்கொண்டேன். ஜனாதிபதி மைத்திரியிடம் நான் எதையும் கோரவில்லை.

எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  – என்னை நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் சென்று அமைச்சுப் பதவியையும் வழங்கினார். இவை அனைத்தும் கட்சிக்காகதான், எனினும், இந்த கட்சியில் தீவிரவாதிகளும் உள்ளனர்.

அவ்வாறானவர்கள், எங்கள் கட்சிக்கு மிகப்பெரிய பாதிப்பாகும்”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்