முற்றும் துறந்தவரால் ஏற்படும் முகச் சுளிப்பு; ஹிக்கடுவயில் ‘ச்சீ..’

🕔 October 5, 2015

Shame - 01வெளிநாட்டு சுற்றுலாப்பயணியொருவர் ஒவ்வொரு நாளும், நிர்வாணமாக கடற்கரைப் பகுதியில் அலைந்து திரிவதோடு, அதே கோலத்துடன் திறந்த வெளியில் குளிப்பது தொடர்பில், அப்பகுதியில் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

ஹிக்கடுவ, நாரிகம பிரதேச ஹோட்டலொன்றில் தங்கியுள்ள, வயதான ஆண் சுற்றுலாப் பயணியொருவரே, இவ்வாறு ‘முற்றும் துறந்து’ திரிவதாகக் கூறப்படுப்படுகிறது.

இந்த நபரின் நடவடிக்கையானது, அப்பகுதிக்கு வரும் மற்றைய சுற்றுலாப் பயணிகளிடை முகச் சுளிப்பை ஏற்படுத்துவதாக புகார் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சுற்றுலாப் பயணி, கடந்த ஒருமாத காலமாக, தமது ஹோட்டலில் தங்கியிருப்பதாக குறித்த ஹோட்டலின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என்றும், தானும் பல தடவை இது தொடர்பில் குறித்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தபோதிலும், பலன் ஏதும் ஏற்படவில்லை என்றும்  ஹோட்டல் முகாமையாளர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் ‘ஹிரு’ தொலைக்காட்சியும் செய்தியொன்றினை வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்