தென் மாகாண சபை இன்று கலைகிறது: வர்த்தமானி அறிவித்தலில் ஆளுநர் கையொப்பம்

🕔 April 10, 2019

தென் மாகாண சபை இன்று புதன்கிழமை நள்ளிரவுடன் கலைகிறது.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோன் இன்று கையொப்பமிட்டார்

ஏற்னவே கிழக்கு, வட மத்திய, சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ளன. வட மேல் மற்றும் வடமாகாண சபையின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாத்தில் நிறைவடைந்தன.

இந் நிலையில் மேல் மாகாண சபையின் பதவிக்காலம் எதிர்வரும் 10 ஆம் திகதி நிறைவடையுள்ளது. ஊவா மாகாணத்தின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை விரைவில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, தேர்தல்கள் ஆணைக்குழு கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்