பொய் மூட்டைக்குள் நிரம்பி வழியும் ஹரீஸ்

🕔 March 31, 2019

வாக்குறுதி என்பது மிகவும் பெறுமதியானது. நேர்மையையும் உண்மையினையும் வாழ்க்கையாகக் கொண்டவர்கள், வாக்குறுதிகளை மீற மாட்டார்கள்.

ஆனால், வாக்குறுதிகளை மீறுவதுதான் நயவஞ்சகர்களின் பண்பாகும். இஸ்லாமும் அப்படித்தான் சொல்கிறது.

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், மிகச் சரியாக 90 நாட்களுக்கு முன்னர், அட்டாளைச்சேனையில் நடந்த பொதுக் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது; “அட்டாளைச்சேனை பிரதேச சபையை 03 மாதங்களுக்குள் நகரசபை ஆக்குவேன்” என வாக்குறுதியளித்திருந்தார்.

வாக்குறுதிகளை இஸ்டப்படி வழங்குவதில் ஹரீஸுக்கு நிகர் – அவரேதான். சந்தர்ப்ப சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவும், கரகோசங்களுக்காகவும் அவர் வழங்கிய வாக்குறுதிகளை எண்ணி விட முடியாது.

ஆனாலும் வாக்குறுதிகளைக் கொடுத்து விளையாட்டுக் காட்டும் அவரின் அரசியலை இனியும் அனுமதிக்க முடியாது. மக்களை முட்டாள்களாகவும், கோமாளிகளாகவும் எண்ணிக் கொண்டு, மக்களின் எதிரில் வாக்குறுதியை அள்ளி வீசி விட்டு, தன்பாட்டில் போய்க் கொண்டிருக்கும் ஹரீஸின் ஏமாற்று அரசியலை – கடந்த 90 நாட்களாக, அட்டாளைச்சேனை மக்களுக்கு பொறுப்புள்ள ஓர் ஊடகம் என்கிற வகையில் தினமும் நாம் நினைவுபடுத்திக் கொண்டிருந்தோம்.

அட்டாளைச்சேனை மக்களை நம்ப வைத்து, ஹரீஸ் ‘கழுத்தறு’த்திருக்கின்றார்.  அல்லது அட்டாளைச்சேனை மக்களை முட்டாளாக்க நினைத்திருக்கின்றார்.

இதற்கு தக்க ‘பாடத்தை’ கற்பித்தே ஆக வேண்டும். அட்டாளைச்சேனை மக்களின் கைகளில் காலம் ஒரு ‘பிரம்பை’த் தராமலா போய் விடும்?

அப்போது, இந்த ஏமாற்று வாக்குறுதியை வழங்கிய ஹரீஸின் அரசியல் ‘புட்டாணத்தில்’, அட்டாளைச்சேனை மக்கள் விளாசாமல் விட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை நமக்கு இருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்