வீதி விபத்துக்களில் கடந்த வருடம் 03 ஆயிரம் பேருக்கும் அதிகமானோர் பலி

🕔 March 31, 2019

மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போரே, வாகன விபத்துக்களின் போது அதிகம் உயிரிழக்கின்றனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

வாகன விபத்துக்கள் காரணமாக இலங்கையில் தினமும் 08 பேர் வரையில் உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கையில் கடந்த 2018ஆம் ஆண்டில் மட்டும், வீதி விபத்துக்களில் 3097 பேர் பலியாகியுள்ளதாக, வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, கடந்த வருடமும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களே அதிகமாக நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கும் மேற்படி வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை, அந்த விபத்துக்களின் எண்ணிக்கை 10,491எனக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் 30 நிமிடங்களுக்கு ஒரு வீதி விபத்து இடம்பெறுவதாகவும், வீதி விபத்தில் பாதிக்கப்பட்ட நிலையில், தினமும் 150 பேருக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதாகவும், தொற்றா நோய் பிரிவுக்கான பணிப்பாளர் நாயகம் திலக் சிறிவர்த்தன கடந்த வருடம் தெரிவித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்